ஒக்ரோபர் புரட்சியும் சோசலிசக் கட்டமைப்பும் ஆய்வரங்கு

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக நடாத்தப்படும் ஆய்வரங்குத் தொடரின் நான்காவது ஆய்வரங்கு ‘ஒக்ரோபர் புரட்சியும் சோசலிசக் கட்டமைப்பும்’ என்ற தலைப்பில் எதிர்வரும் 10.04.2017 (போயா தினம்) திங்கட் கிழமை பி.ப 3. 30 மணியளவில்  இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள  தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

தோழர் பி. முத்துலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் ஆய்வரங்கில் ஆய்வுரையினைத் தோழர் அகிலன் கதிர்காமர் அவர்கள் வழங்கவுள்ளார். புதிய பொருளாதாரத் திட்டம், திட்டமிட்ட பொருளாதாரம், சோசலிச நோக்கில் கல்வியும் சுகாதாரமும் பண்பாடும் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றதான இவ் ஆய்வுரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *