கொலன்னாவ மீதொட்டமுள்ள பேரவலம் தொடர்பில் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

கொலன்னாவ மீதொட்டமுள்ள குப்பை மலை சரிந்து 25 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து, 100 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் நிர்கதியாகியுள்ளமைக்கு அரசாங்கமே காரணம். மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாது, மக்கள் போராட்டங்களை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் விளைவே மீதொட்டமுள்ள பேரவலத்திற்கு காரணமாகும் எனவும் தமது புதுவருட கொண்டாட்டத்தின் போது காவுக்கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும் புதிய- ஜனநாயக மாக்சிச – லெனினிசக்  கட்சி  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மீதொட்டமுள்ள மக்கள் குப்பை மலை மேட்டினால் தாம் அனுபவித்து வந்த கொடுமைகளை அவ்வப்போது தெரிவித்து வந்த போதும் தீர்வு வழங்கப்படாமையினால், கடந்த 2012ம் ஆண்டு வீதியிலிறங்கி போராடினார்கள்இ அதற்கு அரசாங்கம் இராணுவத்தினரை கொண்டே பதிலளித்தது. மீண்டும் 2014 ம் ஆண்டும் பாரிய ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் அதற்கும் இராணுவத்தையும் பொலிசயுமே ஏவினர். மக்களின் மிகவும் நியாயமான கோரிக்கைக்கு கூட அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஇ 2015ம் ஆண்டு மீதொட்டமுள்ள மக்களின் போராட்டத்தை அரசாங்கத்திற்கு சார்பான காடையர்களை கொண்டு அடக்கிய இன்றைய நல்லாட்சி அரசாங்கம், இன்று 2017ம் வருடத்தை சௌபாக்கியமான வருடமாக அமையட்டும் என வாழ்த்துகின்றது. வாழ்த்து மழை பொழிவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, 14ம் திகதி குப்பை மலை சரிந்து பல உயிர்களை காவுக் கொண்டதோடு உடமைகளை அழித்துள்ளது. அத்தனை பெரிய அதிகாரத்தை கொண்டு அன்றே குப்பை மலைக்கு முடிவு கட்டியிருந்தால் இன்று இந்த பேரவலம் நடந்திருக்காதல்லவா ?
              இத்தனை போராட்டத்திற்கு மத்தியிலும் நடந்தேறிய இக்கொடுமைகளை பற்றி ஓரிரு கிழமைகளுக்கு மாத்திரமே கதைத்து விட்டு அவரவர் வேலைகளை பார்க்கச் செல்லும் நடைமுறையை கைவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பிடுகளை வழங்கி மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை இனியாவது உடனடியாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும் என கட்சி வற்புறுத்துவதோடுஇ மக்கள் கூட்டம் தன்னை மாய்த்துக் கொண்டு தன் பிரச்சினையை புரியவைக்கும் வரை வேடிக்கை பார்க்காது மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும் என புதிய- ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி தனதறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *