யாழ்ப்பாணத்தில் புதிய – ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சியின் புரட்சிகர மே தின பேரணியும் பொதுக்கூட்டமும்

புதிய – ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சியின் புரட்சிகர மே தினப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 01.05.2017 திங்கட்கிழமை பி.ப. 5 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் வடபிரதேச செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில் விசேட உரையினைப் பு.ஜ.மா.லெ. கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்களும், சிறப்புரைகளை அரசியல் குழு உறுப்பினர்கள் தோழர் க. தணிகாசலம் மற்றும் தோழர் சோ. தேவராஜா ஆகியோரும், வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர்  என். பிரதீபன் அவர்களும் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் பிரதிநிதி தோழர்  த. ஸ்ரீபிரகாஸ் அவர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தோழர் இ. தவராஜா மற்றும் தோழர் கா. பஞ்சலிங்கம் ஆகியோரும் விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதி தோழர் பொ. முருகேசு அவர்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் தோழர் ச. தனுஜன் அவர்களும் ஆற்றவுள்ளனர்.
இப் பொதுக்கூட்டத்தையொட்டிய மே தினப் பேரணியானது பி.ப. 3 மணிக்கு கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் பாதையில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க அணிதிரள்வோம் என்ற கோசத்தை முன்னிலைப்படுத்தி உழைக்கும் மக்களே! ஒடுக்கப்படும் தேசிய இனங்களே! இளைஞர்களே! மாணவர்களே! ஒன்றுசேருங்கள்! என்ற கோரிக்கையை முன்வைத்து இம் மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது. அனைவரையும் இப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு புதிய – ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சி அழைப்புவிடுக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *