ஒக்ரோபர் புரட்சியும் பெண் விடுதலையும் ஆய்வரங்கு

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக நடாத்தப்படும் ஆய்வரங்குத் தொடரின் 7 ஆவது ஆய்வரங்கு ‘ஒக்ரோபர் புரட்சியும் பெண் விடுதலையும்’ என்ற தலைப்பில் எதிர்வரும் 08.07.2017 (போயா தினம்) சனிக்கிழமை பி.ப 4 மணியளவில்  இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள  தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
தோழர் க. வாஹினி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் ஆய்வரங்கில் ஆய்வுரையினைத் தோழர் எஸ். மோகனதர்ஷினி அவர்கள் வழங்கவுள்ளார். பெண்கள் பற்றிய மாக்சியப் பார்வை, பெண்களின் அமைப்பாக்கம், அடையாள அரசியலும் பெண் விடுதலையும் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றதான இவ் ஆய்வுரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *